சென்னை:சென்னையில் நடந்த மகளிர் கல்லூரிகள் நீச்சல் போட்டியில், ஜெ.பி.ஏ.எஸ்., மகளிர் கல்லூரி, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
தேனாம்பேட்டை நீதியரசர் பஷீர் அகமது சையத் மகளிர் (ஜெ.பி.ஏ.எஸ்) கல்லூரியில், நடந்த மாநில நீச்சல் மகளிர் கல்லூரிகள் போட்டியில், ஜெ.பி.ஏ.எஸ்., மகளிர் கல்லூரி, 34 புள்ளிகள் பெற்று, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது.
இரண்டாம் இடத்தை, 32 புள்ளிகளுடன், எம்.ஒ.பி., மகளிர் கல்லூரியும், மூன்றாம் இடத்தை, 22 புள்ளிகளுடன் எத்திராஜ் மகளிர் கல்லூரியும் பிடித்தன.