சென்னை:மாவட்டங்களுக்கு இடையே, ஊரக பெண்கள்
பங்கேற்கும், டி - 20 கிரிக்கெட் போட்டி, சென்னையில் நடக்கிறது.
தமிழ்நாடு டி - 20 கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்டங்களுக்கு இடையே, ஊரக மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள, ஆண்கள் மற்றும் பெண்கள்
பங்கேற்கும், டி - 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, சென்னை பட்டாபிராமில் உள்ள இந்து கல்லூரியில் நடக்க இருக்கிறது.
வரும் 25ம் தேதி துவங்கி, 29ம் தேதி வரை, போட்டிகள் நடக்க உள்ளன. விவரங்களுக்கு, 98400 04831 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.