சென்னை:சென்னையில் நடந்த, மகளிர் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டிகளில், ஜெ.பி.ஏ.எஸ்., மகளிர்
கல்லூரி, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
தேனாம்பேட்டையில் உள்ள, ஜெ.பி.ஏ.எஸ்.,
மகளிர் கல்லூரி சார்பில், மகளிர் கல்லூரிகள்
பங்கேற்கும், வாலிபால், கபடி, கோ-கோ, எறிபந்து, கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தன.
இதில், ஜெ.பி.ஏ.எஸ்., மகளிர் கல்லூரி, 34 புள்ளிகள் பெற்று, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 32 புள்ளிகளுடன், எம்.ஓ.பி., மகளிர் கல்லூரி, இரண்டாம் இடமும்; 22 புள்ளிகளுடன்,
எத்திராஜ் மகளிர் கல்லூரி, மூன்றாம் இடமும் பிடித்தன.