Advertisement
தினமலர் முதல் பக்கம் » சென்னை மாவட்டம் »முக்கிய செய்திகள் செய்தி
கொசுக்களுக்கு மலட்டு தன்மை உண்டாக்கும் புதிய யுக்தி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2012,01:25 IST

சென்னை:கொசு உற்பத்தியை கட்டுப்
படுத்தும் வகையில், கொசுக்
களுக்கு மலட்டு தன்மை உண்டாக்கும் புதிய நடைமுறையை கொண்டு வர, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், கொசு ஒழிப்பு பணியில் தனியாரை
ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
விரிவாக்கப்பட்ட சென்னையில், அதிகரித்து வரும் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த
முடியவில்லை.
அதனால், கொசு ஒழிப்பு பணியில் தனியாரை ஈடுபடுத்த முடிவெடுத்த மாநகராட்சி, அழைப்பு விடுத்தது.
கடந்த அக்டோபர் மாதத்தில், தனி நபர்கள், ஆலோசனை
நிறுவனங்கள், செயல்படுத்தும் நிறுவனங்கள் என, 24 விண்ணப்பங்கள் வந்தன.
புது தொழில்நுட்பம் இல்லை என, இந்த முடிவை கைவிடுவதாக, முந்தைய ஆணையர்
கார்த்திகேயன் தெரிவித்தார்.
பட்ஜெட்டில் மேயர் அறிவித்த திட்டம் கைவிடப்படுவதாக ஆணையர் கூறிய தகவல், சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசித்த மேயர் சைதை துரைசாமி, ""கொசு ஒழிப்பில் தனியாரின் பங்களிப்பை பெறுவது கைவிடப்படவில்லை; இதுகுறித்து விரைவில் முடிவு செய்யப்படும்,'' என்றார்.
இந்நிலையில், கொசு
ஒழிப்பு பணியில் தனியாரை ஈடுபடுத்துவது என்ற முடிவை, மாநகராட்சி எடுத்துள்ளது.
தனியாரின் ஆலோசனை படி, "சிரைல் மேல் டெக்னிக்' எனப்படும், ஆண் கொசுக்களுக்கு மலட்டு தன்மை உருவாக்கும் நடைமுறையை கொண்டு வரும் முடிவுக்கு, மாநகராட்சி வந்துள்ளது.
சிக்கல்கள் என்ன?
புகை அடித்தல், மருந்து தெளிக்கும் நடைமுறைகளால் கொசுக்கள் ஓரளவு கட்டுக்குள் வந்தாலும், சில நடைமுறை
களில் கொசுக்களை கட்டுப்
படுத்த முடிவதில்லை.
பொதுவாக,
டூ இறுக முடிய குடிநீர் தொட்டிகள் (சின்டெக்ஸ்) போன்று அல்லாமல், தொட்டிகளின் மேல் பகுதியில், "கான்கிரீட்' மூடி மூடப்படுகிறது. இதன் இடைவெளியில் செல்லும் கொசுக்களை கட்டுப்படுத்த முடிவதில்லை.
டூ கழிவு நீர் தொட்டிகளில் உருவாகும் கொசுக்களையும் கட்டுப்படுத்த முடியாது. புகை மருந்து அடித்தாலும், வளர்ச்சியடைந்த கொசு மட்டுமே சாகும். "லார்வா' நிலையை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதுகுறித்து, ஆலோசகர் ரெக்ஸ் கூறியதாவது:
இந்த சிக்கல்களை கருத்தில் கொண்டே, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில், "சிரைல் மேல்
டெக்னிக்' என்ற முறை செயல்
படுத்தப்படுகிறது.
அதே முறையில் இங்கு செயல்படுத்த, ஆலோசனை கொடுத்துள்ளேன். எந்த மாதிரி நடைமுறை என்பதை இப்போது கூற முடியாது; மாநகராட்சி அனுமதித்த பின்னரே தெரிவிக்க முடியும்.
இந்த நடைமுறை உள்ள பகுதிகளில், ஆண் கொசுக்கள், மற்ற பகுதிகளில் வளரும் பெண் கொசுக்களுடன் இணைந்தாலும், கொசு உற்பத்தியாகாத முட்டைகளையே இடும். எனவே, கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்காது. தொடர் நடவடிக்கைகளால், கொசுக்களின்
உற்பத்தி கட்டுக்குள் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள்:
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
S.Imtiaz - chennai  ( Posted via: Dinamalar Windows App )
19-டிச-201209:33:39 IST Report Abuse
S.Imtiaz அன்று நாய் இன்று கொசுவா....?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Jaya - Chennai,இந்தியா
18-டிச-201210:59:30 IST Report Abuse
Jaya கொசுவை வைத்து காமடி பண்றாக நாயை வைத்து பண்ணிய பழைய காமடி இது ..... நடக்கட்டும் நடக்கட்டும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
18-டிச-201210:09:48 IST Report Abuse
தாதே.குல்சார் அஹ்மத் எப்பயோ கொசுக்கள் நிரந்திரமாக ஒழிக்கப்பட்டால் டெங்கு காய்ச்சலுக்கு கல்தா தான்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.