சென்னை:ரயிலில் பயணம் செய்யும் அய்யப்ப பக்தர்கள்,
இருமுடிக்கு தீபாராதனை செய்ய, தடை விதித்து, ரயில்வே பாதுகாப்பு படையினர், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல, நாடு முழுவதும் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள், ரயில்களில் பயணம் செய்கின்றனர்.
இவர்கள், தாங்கள் கொண்டு செல்லும்
இருமுடிக்கு, ரயில் பயணத்தின் போது, கற்பூரம் ஏற்றி, தீபாராதனை செய்கின்றனர். தீபாராதனை செய்யும்போது, ரயில்களில், தீ விபத்து நடக்க
வாய்ப்புள்ளது.
இதுகுறித்து, ரயிலில் பயணிக்கும் அய்யப்ப பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில், ரயில்வே பாதுகாப்பு படையினர், அய்யப்ப பக்தர்களுக்கு, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.
அதில், "ரயிலில் பயணம் செய்யும் போது,
இருமுடிக்கு கற்பூரம் ஏற்றி, தீபாராதனை செய்யக்
கூடாது; கற்பூரம் ஏற்றும் இடம், கோவில் மட்டுமே. ரயிலில் கற்பூரம் ஏற்றுவதால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.