பஸ் ஸ்டாண்டுகளில் அதிகாரிகள் ஆய்வு :தேவையற்ற பஸ்களை நிறுத்த திட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 டிச
2012
20:38

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், அதிக வருவாய் தரக்கூடிய வழித்தடங்கள்; போக்குவரத்து வசதியற்ற வழித்தடங்கள், இரவு நேரங்களில் இயக்கப்படும் தேவையற்ற பஸ்கள் மற்றும் பயணிகள் வருகை தொடர்பாக, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். முக்கியமான நகரங்களில், இரவு நேரங்களில், பஸ் ஸ்டாண்டுகளில் முகாமிடும் அதிகாரிகள், தொடர்ந்து 15 நாட்கள் ஆய்வு செய்ய, திட்டமிட்டுள்ளனர்.அரசு போக்குவரத்து கழகம், திருப்பூர் மண்டலத்தில், திருப்பூர் 1 மற்றும் 2, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, பழனி 1 மற்றும் 2 என எட்டு கிளைகள் உள்ளன. டவுன் பஸ்கள் 264, தொலைதூர (மப்ஸல்) பஸ்கள் 312 இயக்கப்படுகின்றன.திருப்பூர், தாராபுரம், காங்கயம், பழனி ஆகிய நகரங்கள், கடந்த 10 ஆண்டுகளாக தொழில் வளர்ச்சி பெற்ற நகரங்களாக மாறி வருகின்றன.

விவசாய பகுதிகள் பலவும், குடியிருப்பு மனைகளாக மாறியுள்ளன; ஊரக பகுதிகளில் குடியிருப்புகள், அதிகளவில் விரிவடைந்துள்ளன; ஏராளமான புதிய குடியிருப்புகள் உருவாகியுள்ளன. நகர வளர்ச்சியும், மக்கள் தொகை பெருக்கமும் அதிகரித்து கொண்டே இருப்பதால், போதிய அளவில் பஸ் போக்குவரத்தை ஏற்படுத்துவதும், மேம்படுத்துவதும் மிக அவசியமாக உள்ளது.ஏனெனில், 15 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய மக்கள் தொகை அடிப்படையிலும், குடியிருப்பு பகுதிகளின் தேவை பொருட்டும் தீர்மானிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே பஸ்
களின் இயக்கம் நடைமுறையில் உள்ளது. குடியிருப்புகள் நிறைந்துள்ள பகுதிகளில் பஸ் போக்குவரத்து குறைவாக இருப்பதும், சில பகுதிகளில் தேவைக்கு அதிகமாக, அதிக எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால், பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தாலும், சில வழித்தடங்களில் போதிய வருவாய் கிடைப்பதில்லை.அதன் காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் அதிக வருவாய் கிடைக்கும் வழித்தடங்கள்; போக்குவரத்து வசதியற்ற வழித்தடங்கள், இரவு நேரங்களில் இயக்கப்படும் தேவையற்ற பஸ்கள் மற்றும் பயணிகள் வருகை தொடர்பான ஆய்வில், அரசு போக்குவரத்து கழக, திருப்பூர் மண் டல அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட், பழனி, காங்கயம், தாராபுரம் ஆகிய பஸ் ஸ்டாண்டுகளில், 15 நாட்களுக்கு இரவு நேர ஆய்வில் அதிகாரிகள் ஈடுபட்டுள் ளனர். அரசு பஸ்களின் எண்ணிக்கை, இயக்கப்படும் வழித்தடங்கள், வழித்தடத்தில் உள்ள முக்கிய நகரங்கள், பஸ்சில் ஏறி, இறங்கும் பயணிகள் எண்ணிக்கை, இரு அரசு பஸ்
களுக்கு நடுவே உள்ள நேர இடைவெளி, அதிக பயணிகள் ஏறும் பகுதிகள், குறைந்த பயணிகள் ஏறும் பகுதிகள் குறித்து கணக்கெடுக்கின்றனர். அரசு பஸ்கள் இயக்கப்படும் நேரங்களில் இயங்கும் தனியார் பஸ்கள், அதில் உள்ள பயணிகள் கூட்டம் போன்றவற்றையும் கண்காணிக்கின்றனர்.அதனடிப்படையில், அதிகளவு பயணிகள் செல்லும் வழித்தடங்களில் பஸ்களை அதிகரிக்கவும், வருவாய் அற்ற வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையை குறைத்து, தேவைக்கேற்ப மாற்று வழித்தடங்களில் இயக்கவும் போக்குவரத்து கழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில்,"இரவு நேரங்களில் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை, பயணிகளின் வருகை தொடர்பாக, பஸ் ஸ்டாண்டுகளில் 15 நாட்களுக்கு ஆய்வு நடத்தி, அறிக்கை தயார் செய்யப்படும். தேவையான வழித்தடங்களில் பஸ்களை கூடுதலாக இயக்கவும், தேவையற்ற பஸ்களை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

 

Advertisement


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.