ஆக்கிரமிப்பில் அண்ணா நகர் "டவர்ஸ் கிளப்' : மொத்த இடத்தையும் மீட்பதில் மாநகராட்சி தயக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

20 டிச
2012
06:26
பதிவு செய்த நாள்
டிச 19,2012 00:49

சென்னை : மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து, 19 ஆண்டுகளாக செயல்படும் அண்ணா நகர் "டவர்ஸ் கிளப்பின்' ஒரு பகுதி கட்டடத்திற்கு,"சீல்' வைத்த மாநகராட்சி, மொத்த இடமும் மீட்கப்படும் என, அறிவித்து இரண்டு மாதத்திற்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தயக்கம் காட்டி வருகிறது.சென்னை அண்ணா நகர் பகுதியில், "டவர்' பூங்காவையொட்டி, 39 ஆயிரம் சதுர அடியில், "டவர்ஸ் கிளப்' செயல்படுகிறது. இந்த இடம், மாநகராட்சிக்கு சொந்தமானது. இதில், 5,872 சதுரடி இடம், "டவர்ஸ் கிளப்'பிற்கு, மூன்றாண்டு காலம் குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. இந்த குத்தகை காலம், 1992, செப்., 3ம் தேதியுடன் முடிந்தது. அதன்பின், ஓராண்டு காலம் குத்தகை நீட்டிப்பு செய்யப்பட்டது.ஆக்கிரமிப்புஅதன்பின், குத்தகை நீட்டிப்பு செய்யப்படவில்லை. ஆனால், 19 ஆண்டுகளாக அண்ணா நகர் "டவர்ஸ் கிளப்' அலுவலகம், தொடர்ந்து அந்த இடத்திலேயே இயங்கி வந்தது. அதையொட்டிய, மாநகராட்சிக்கு சொந்தமான, 33,255 ச.அடி., நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளது வெளிச்சத்துக்கு வந்தது.இதை கண்டறிந்த பொதுக்கணக்கு குழு, குத்தகை நீட்டிப்பில்லாமல் பயன்பாட்டுக்கு மற்றும் அனுபோக இடத்திற்கு சேர்த்து, 48.85 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட வேண்டும் என, வலியுறுத்தியது.மாநகராட்சி தாக்கீது அனுப்பியும், "டவர்ஸ் கிளப்' அலட்சியம் காட்டி வந்தது. இதுகுறித்து, "தினமலர்' நாளிதழில், விரிவான செய்தி வெளியானது. இதை யடுத்து, "டவர்ஸ் கிளப்', நிலுவை தொகை, 48.85 லட்ச ரூபாயை, ஒரே நாளில் செலுத்தியது.நிலத்தை, குத்தகைக்கு தரவும் கோரிக்கை வைத்தது. இதனால், மீட்பு நடவடிக்கைகளில் பின்னடைவு ஏற்படுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.மாநகராட்சி அதிரடிஆனால், மாநகராட்சி அதிரடியான நடவடிக்கையில் இறங்கியது. மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி, அக்., 3ம் தேதி, "டவர்ஸ் கிளப்' பின் ஒரு பகுதியில் உள்ள, உணவு கூடம், உடற்பயிற்சி கூடமும் செயல்பட்டு வந்த இரண்டு மாடி கட்டடத்திற்கு, அதிகாரிகள்,"சீல்' வைத்தனர். மற்றொரு கட்டடத்தில் செயல்படும், குடி மையத்தை மூடவும், மதுவிலக்கு ஆயத்தீர்வைக்கு, மாநகராட்சி பரிந்துரை செய்தது."மாநகராட்சி இடத்தை மீட்கும் முயற்சியில் இது துவக்கம் தான். "டவர்ஸ் கிளப்'பின் ஆக்கிரமிப்பில் உள்ள மாநகராட்சியின், ஒட்டுமொத்த இடமும் விரைவில் மீட்கப்படும்' என, மாநகராட்சி நம்பிக்கை தெரிவித்தது."பாசம்' காரணமா?இப்படி அறிவித்து, இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், அதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் மாநகராட்சி தயக்கம் காட்டி வருகிறது. சொந்த இடத்தை கூட மீட்க முயலாமல், மாநகராட்சி தயக்கம் காட்டி வருவது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இந்த கிளப்பில், பெரும்பாலான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இருந்து வருகின்றனர். இந்த "பாசம்' காரணமாக, தொடர் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியுள்ளதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாநகராட்சி எடுத்த நடவடிக்கைளுக்கு எதிராக, "டவர்ஸ் கிளப்' நிர்வாகம் கோர்ட்டை நாடியுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், ஒட்டு மொத்த இடத்தையும் மீட்பதில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. சட்டரீதியாக மாநகராட்சி இதை எதிர்கொள்ளும். மாநகராட்சிக்கு சொந்தமான மொத்த இடமும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இத்தனை ஆண்டுகள் கிளப் செயல்பட்டு வந்தாலும், அரசியல் குறுக்கீடுகள் காரணமாகவே இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் இருந்தன. சமீபத்தில், மாநகராட்சி எடுத்த முயற்சிகள் நல்ல துவக்கமாக இருந்தன.பல வகையிலும் வரும் குறுக்கீடுகளை பற்றி கவலைப்படாமல், பல கோடி ரூபாய் மதிப்பிலான மாநகராட்சி இடத் தை மீட்டெடுக்க வேண்டும் என்பதே, மக்களின் விருப்பம்.

 

Advertisement


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.