சென்னை : மகளிர் சுய உதவி குழுவினர் தயாரித்த பொருட்கள் கண்காட்சி, நாளை துவங்குகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையொட்டி, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுய உதவி குழுவினரின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், நாளை துவங்குகிறது. கண்காட்சியில், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள், முகாம் வாழ் தமிழர்கள் மற்றும் திருநங்கையர் உற்பத்தி செய்த பொருட்களை காட்சிப்படுத்த உள்ளனர்.தமிழகத்தின், 32 மாவட்டங்களை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர், தாங்கள் தயாரித்த வீட்டு உபயோக பொருட்கள், சணல் பொருட்கள், தானிய வகைகள், கலை பொருட்கள் மற்றும் ஊறுகாய் வகைகளை காட்சிப்படுத்த உள்ளனர். கண்காட்சியில், 10 ரூபாய் முதல், 15 ஆயிரம் ரூபாய் வரையிலான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. நாளை முதல் ஜனவரி, 20ம் தேதி வரை, மூன்று கட்டமாக நடக்க உள்ள கண்காட்சியை, காலை 10:00 முதல், இரவு, 8:00 மணி வரை பார்வையிடலாம்.