Advertisement
மது அருந்தியதால் கண்டிப்பு இருவர் தூக்கிட்டு தற்கொலை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2012,00:51 IST

ஆவடி : மது அருந்தியதை கண்டித்ததால், மனமுடைந்த இரண்டு பேர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.ஆவடி, எச்.வி.எப்., குடியிருப்பை சேர்ந்தவர், தேவராஜ் மகன் நரேஷ், 24. ஏழாம் வகுப்பு வரையே படித்த இவர், வேலை ஏதும் செய்யாமல், வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, மது அருந்தி வீட்டுக்கு வந்த நரேஷை, அவரின் தாய் கண்டித்தார்.இதனால், மனமுடைந்த நரேஷ், படுக்கை அறைக்கு சென்று, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். டேங்க் பேக்டரி போலீசார் விசாரிக்கின்றனர்.ஸ்ரீராம் நகர்: ஆவடி, ஸ்ரீராம் நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் சேகர், 44. தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இவருக்கு, மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சேகரை, மனைவி பார்வதி கண்டித்தார்.இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று காலை, வீட்டு முற்றத்தில், சேகர் திடீரென தூக்கு மாட்டி, தற்கொலை செய்து கொண்டார். ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள்:
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.