திருப்பூர்:திருப்பூர்
ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா வரும் 24ல்
நடக்கிறது. அன்று அதிகாலை 5.30 மணியளவில், சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
அன்று,
சொர்க்க வாசல் கடந்து வரும் பக்தர்களுக்கு, ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில்
லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படும். ஒரு லட்சம் லட்டு தயாரிக்கும் பணி,
பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள ஸ்ரீகாமாட்சியம்மன் திருமண மண்டபத்தில்
வரும் 22 முதல் 23 வரை நடைபெறும்.