திருப்பூர்:சிறப்பு
கிராம சபா தொடர்பாக, முறையாக அறிவிப்பு செய்யாமல், ஊராட்சி மன்ற
அலுவலகங்களிலேயே புயல் வேகத்தில் நடத்தி முடிக்கப்பட்டன.தேசிய ஊரக வேலை
உறுதி திட்டம் தொடர்பான சிறப்பு கிராம சபா கூட்டம், திருப்பூர்
மாவட்டத்தில் நேற்று நடந்தது. தொழிலாளர்கள் மூலமாக, நில மேம்பாடு செய்வது;
தனிநபர் இல்லக்கழிப்பிடம் அமைக்கும் பணியில் தொழிலாளர்களை ஈடுபடுத்துவது
குறித்து அறிவுறுத்தப்பட்டது. வழக்கமாக, கிராம சபா நடத்தப்படுவது குறித்து
முன்னறிவிப்பு செய்வது வழக்கம்.நேற்று, ஊராட்சி உறுப்பினர்கள், குடிநீர்
ஆபரேட்டர்கள், துப்புரவு பணியாளர்களை கொண்டு கூட்டம் நடத்தப்பட்டது.
பெயரளவுக்கு, பயனாளிகளை தேர்வு செய்து பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஊரக
வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் செல்வகணபதி, குடிமங்கலம் ஒன்றியம்,
கோட்டமங்கலம்
ஊராட்சியிலும், மடத்துக்குளம் ஒன்றியம் வேடபட்டி
ஊராட்சியிலும் நடந்த கூட்டங்களில் பங்கேற்றார்.பெரும்பாலான ஒன்றியங்களில்,
"போட்டோ ' எடுத்துக்கொண்டு, சிறப்பு கிராம சபா கூட்டம் புயல் வேகத்தில்
நடத்தி முடிக்கப்பட்டது. பயனாளிகள் பட்டியல் உத்தேசமாக தயாரிக்கப்பட்டதால்,
மீண்டும் கள ஆய்வு செய்து, உண்மையான பயனாளிகளை கண்டறிய வேண்டுமென வட்டார
வளர்ச்சி அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.