சென்னை:சென்னையில் நடைபெற்று வரும், மாவட்ட கூடைப்பந்து போட்டியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.,) அணி வெற்றி பெற்றது.
சென்னை மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில், துரைசாமி நினைவு கோப்பைக்கான கூடைப்பந்து லீக் போட்டி, சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி மைதானத்தில், நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த போட்டியில், எஸ்.டி.ஏ.டி., அணி, 55 - 41 என்ற புள்ளிக்கணக்கில் இண்டியானா அணியை வென்றது.