Advertisement
தினமலர் முதல் பக்கம் » சென்னை மாவட்டம் »முக்கிய செய்திகள் செய்தி
புற்றுநோய்களுக்கு ஒரேவித சிகிச்சை கருத்தரங்கில் தகவல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2012,22:23 IST

சென்னை:ராமச்சந்திரா பல்கலைக்கழகம், "புற்றுநோய் சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள்' எனும் தலைப்பில், சர்வதேச கருத்தரங்கை, சென்னையில், நேற்று நடத்தியது.
இதுகுறித்து, பல்கலைக்கழகத்தின், புற்றுநோய் மருத்துவத் துறை பேராசிரியர் அனிதா ரமேஷ் கூறியதாவது:
கர்ப்பப் பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், ரத்த புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட, 70 வகை புற்றுநோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர்.
இவற்றுக்கு, அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, மருந்து முறை சிகிச்சை ஆகியவை தரப்
படுகின்றன.
மருத்துவமனைகளில் உள்ள சிகிச்சை வசதி மற்றும் மருத்துவர்களின் அனுபவத்தை பொறுத்து, புற்றுநோய்களுக்கு தரப்படும் சிகிச்சை மாறுபடுகிறது.
இதனால், புற்று நோயாளிகள், ஓரிடத்தில் இருந்து, மற்றொரு இடத்திற்கு சென்று சிகிச்சை பெறுவதில், சிக்கல் ஏற்படுகிறது.
இச்சிக்கல் தீர, புற்றுநோய்களுக்கு, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், ஒரேவித சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
புற்றுநோய் சிகிச்சை நிபுணர்களுக்கு,
அதற்கான வழிகாட்டுதல்களை, இக்கருத்தரங்கம் அளிக்கிறது.
வழிகாட்டுதல் நெறிமுறைகளை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வகுத்துள்ளது.
இவ்வாறு, அனிதா ரமேஷ் கூறினார்.
இக்கருத்தரங்கில், பல்வேறு மாநிலங்களின், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த, 350க்கும் மேற்பட்ட புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள்:


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.