புழல் : தீபாவளி
சீட்டு பிடித்து வாடிக்கையாளர்களுக்கு பணம் கொடுக்காமல் மாயமான மனைவி
குழந்தைகளை கண்டுபிடிக்க முடியாத விரக்தியில், தையல் தொழிலாளி புழலேரியில்
குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை புழல் காவாங்கரை கண்ணப்பசாமி
நகரை சேர்ந்தவர் கேசவன், 38. தையல் தொழிலாளி. இவரது மனைவி ருக்மணி, 32.
இவர்களுக்கு ஜனனி, 15. யுவஸ்ரீ, 14. என, இரு மகள்கள் உள்ளனர். ருக்மணி
தீபாவளி பண்டு மற்றும் சீட்டுகள் நடத்தி வந்தார். தீபாவளி முடிந்த பிறகும்
பலருக்கு உரிய பணம், பொருட்களை அவர் தரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நெருக்கடியால், கடந்த 12ம் தேதி தனது மகள்களுடன் ருக்மணி மாயமானார். இதனால் மனமுடைந்த கேசவன், கடந்த 20ம் தேதி மாயமானார்.
இதுகுறித்து
போலீசில் அவரது உறவினர் புகார் செய்தார். இந்நிலையில் காணாமல் போன
கேசவனின் உடல், நேற்று முன்தினம் புழலேரி "ஜோன்ஸ் டவர்' பகுதியில்
மிதந்தது. புழல் போலீசார் பிணத்தை மீட்டு, வழக்கு பதிவு செய்தனர்.