சென்னை : பாரதிய வித்யா பவன் சார்பில், இலவச கணினி பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.கடந்த 15 ஆண்டுகளாக, பாரதிய வித்யா பவன் சார்பில், காந்தி கணினி கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையத்தில் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு, இலவச கணினி பயிற்சி வழங்கி வருகிறது. மூத்த குடிமகன்களுக்கும் இலவச கணினி பயிற்சி வழங்கப்படுகிறது. இலவச கணினி பயிற்சி பெற விரும்புவோர், பவன்ஸ் காந்தி நிறுவனம், எண்: 18-22, கிழக்கு மாதா தெரு, மயிலாப்பூர், சென்னை-4 என்ற முகவரியிலும், எண்: 12, தணிகாசலம் தெரு, தி.நகர், சென்னை-17 என்ற முகவரியிலும் விண்ணப்பங்கள் பெறலாம். வரும் ஜனவரி, 17ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என, காந்தி கணினி கல்வி மற்றும் தொழில்நுட்ப மைய இயக்குனர் ராமசாமி தெரிவித்தார்.