சென்னை : இரவு ரோந்தில் ஈடுபட்ட போலீஸ் வாகனம், மரத்தின் மீது மோதிய விபத்தில், எஸ்.ஐ., உட்பட, ஐந்து போலீசார் படுகாயமடைந்தனர்.
அடையாறு
பகுதியில், நேற்று முன்தினம், எஸ்.ஐ., ஆனந்தகுமார் மற்றும் நான்கு
போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை நேரத்தில், அடையாறு
கஸ்தூரிபாய், மூன்றாவது குறுக்கு தெரு அருகே சென்றபோது, போலீசார்
சென்ற வாகனம், திடீரென வேப்ப மரத்தின் மீது மோதியது.
இதில்,
எஸ்.ஐ., அண்ணாமலை, போலீஸ்காரர்கள் ஜான் பிரதாப், மனோஜ் குமார், எழில்,
ராதாகிருஷ்ணன் ஆகிய ஐந்து பேரும் பலத்த காயமடைந்தனர். இவர்கள், தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, அடையாறு
போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.