புகார் பெட்டி
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 டிச
2012
21:51

குடி தண்ணீர் கிடைக்குமா?

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள, கபாலி வன போஜன தோட்டம் பகுதியில், பல வீடுகளில், குழாயில் குடிநீர் வந்து மாதக் கணக்காகிறது. இதனால், தண்ணீர் கிடைக்கும் இடங்களை தேடி, அப்பகுதி மக்கள் அலைகின்றனர். குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டால், "உங்கள் பகுதிக்கு, மழை வந்தால் தான் குடிநீர் கிடைக்கும்' என, பொறுப்பற்ற முறையில் பதில் கூறுகின்றனர். பகுதி மக்கள் நலன் கருதி, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - மல்லிகா, ராஜா அண்ணாமலைபுரம். தெருவெங்கும் கழிவுநீர் அயானவரம், துரைசாமி நாயக்கன் தெருவில், கடந்த பல மாதங்களாக தொடரும், கழிவு நீர் குழாய் அடைப்பால், தெரு முழுவதும் கழிவு நீர் சூழ்ந்துள்ளது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தெருவில் வசிப்பவர்கள், பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
அவ்வழியாக செல்லும், மாணவர்கள், தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள், தெருவை கடந்து செல்வதற்குள், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, 98வது வட்ட அலுவலக அதிகாரிகள், கழிவுநீர் குழாய் அடைப்பை சரி செய்ய, தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி, தெரு வாழ் மக்கள் சார்பில் கேட்டு கொள்கிறேன். - சி.ஆர்.கிருஷ்ணமுரளி, அயனாவரம்.

நேரத்திற்கு வராத பேருந்து

பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து, மேடவாக்கம் சாலை சந்திப்பு வரை இயங்கும், "தடம் எண் எம்14' என்ற மாநகர பேருந்து, அலுவலக நேரத்தில், அதாவது, காலை 7:30 மணி முதல், 9:30 மணி வரை, குறித்த நேரத்தில் பேருந்து நிறுத்தத்திற்கு வருவதில்லை. இதனால், பணிபுரிபவர்கள், மாணவ, மாணவியர், தினமும் கடும் இன்னல்களை சந்திக்க வேண்டி உள்ளது.
மேலும், அதிகளவில் பணம் கொடுத்து, ஆட்டோவில் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே, இந்த வழி தடத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணிப்பதால், இந்தப் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வி.ஏழுமலை, மடிப்பாக்கம்.

குண்டும், குழியுமான சாலை

பல்லாவரம் கன்டோன்மென்ட் பள்ளி அருகில் உள்ள, பிராட்வேயில் இருந்து, பம்மல் அனகாபுத்தூர் பேருந்து செல்லும் தார் சாலை, குண்டும், குழியுமாக, படுமோசமாக உள்ளது.
மழைக்காலங்களில், சாலையில் மழைநீர் தேங்குவதால், பள்ளம், மேடு தெரியாமல், இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
விபத்துகள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலையை உடனடியாக சரி செய்ய, ஆவன செய்ய வேண்டும். - அழகன் மனோகரன், பம்மல்.

தேவை மழைநீர் வடிகால்வாய்

நங்கநல்லூர் ராகவேந்திரா கோவிலில் இருந்து, ராம் நகர் இரண்டாவது பிரதான சாலை சந்திப்பு வரை, சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. மேலும், மழைநீர் வடிகால் வசதி இல்லாததால், கடந்த பல ஆண்டுகளாக, மழைக் காலங்களில், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் அனேக பக்தர்கள், இவ்வழியை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். எனவே, சென்னை மாநகராட்சியின், வார்டு எண்: 165ன் கீழ் வரும் இந்தச் சாலையை சரி செய்யவும், மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்தவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராகவ், நங்கநல்லூர்.

துர்நாற்றம் தாங்க முடியலையே

வில்லிவாக்கம் மார்க்கெட் அருகே, பாலசுப்ரமணி தெருவில் உள்ள பாதாளச் சாக்கடையில், அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. கழிவுநீர் கசிந்து, சாலை முழுவதும் தேங்கி நிற்கிறது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால், சில நாட்கள் கழித்து வரும் துப்புரவு பணியாளர்கள், அடைப்பை அரைகுறையாக சரி செய்துவிட்டு செல்வதால், இரண்டொரு நாளிலேயே, மீண்டும் அடைத்து கொள்கிறது.எனவே, ஊழியர்களை பொறுப்புடன் பணி செய்யும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். அப்போது தான், இதுபோன்ற பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். - கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

சென்னை, கலெக்டர் நகரில் இருந்து, பஜார் ரோடு, வளையாபதி சாலை, பாரி சாலை வழியாக, ஜெ.ஜெ.நகர் கிழக்கு செல்லும் சாலை நெடுகிலும், ஆக்கிரமிப்புகள் பெருகி விட்டன. வியாபாரிகள், பொருட்ளை நடைபாதையில் வைத்து வியாபாரம் செய்கின்றனர்.
டீக்கடைகள், துரித உணவகங்கள், நடைபாதையை சமையல் அறையாக மாற்றி விட்டனர். மேலும், சாலையின் இரு ஓரங்களிலும், வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், நெரிசல் அதிகமாகி, போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது. குறிப்பாக, மாநகர பேருந்து ஓட்டுனர்கள், சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். சென்னை மாநகராட்சியும், போக்குவரத்து காவல்துறையும் இணைந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, நெரிசலை தவிர்க்க வழி செய்ய வேண்டும்.- சி.பி.ஸ்ரீராம், முகப்பேர்.

கனரக வாகனங்களால் மோசமாகும் சாலை

மேடவாக்கம் பிரதான சாலையில் இருந்து, வடக்குபட்டு செல்லும் சாலை, மிகவும் பழுதடைந்து, மோசமாக உள்ளது. இப்பகுதியில், நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் புதிதாக உருவாகி உள்ளது. இருப்பினும், சாலை சரி செய்யப்படாமலேயே உள்ளது. கனரக வாகனங்கள் அதிகளவில் சாலையில் செல்வதால், சாலை மேலும் மோசமடைகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலையை விரைவில் சரி செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். - டி.வி.ராமஸ்வாமி, வடக்குபட்டு சென்னை.

துரத்தும் நாய்களால் அச்சம்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு உட்பட்ட, வட சென்னை சேணியம்மன் கோவில் திட்டப் பகுதியில், திருவள்ளுவர் நகரில் உள்ள, 600 குடியிருப்புகளில், 3,000க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், 50க்கும் அதிகமான சொரி நாய்கள் சுற்றித் திரிகின்றன.
இவைகள், அப்பகுதி சாலைகளில் நடந்து செல்பவர்களையும், குழந்தைகளையும் துரத்தி தொந்தரவு செய்வதால், வெளியில் நடமாடவே அச்சமாக உள்ளது. மாநகராட்சி சுகாதார பிரிவினரிடம் புகார் தெரிவித்தால், பெயருக்காக வந்து, ஐந்து நாய்களை மட்டும் பிடித்து சென்றனர். எனவே, பகுதி வாசிகள் நலன் கருதி, சொரி பிடித்து திரியும் அனைத்து நாய்களையும், அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டுகிறோம்.- எம்.முனுசாமி, சென்னை.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வினோத் - மாதவரம்பொன்னியம்மன்மேடுசென்னை,இந்தியா
30-டிச-201218:45:29 IST Report Abuse
வினோத் "கை விட்டது மாதவரம் நகராட்சி - கை கொடுக்குமா சென்னை மாநகராட்சி" சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம்- 3 வார்டு- 33 பாகம்- 8 க்கு உட்பட்ட பொன்னியம்மன்மேடு வாசு நகர் முதல் தெருவில் கடந்த 2006 அக்டோபர் மாதத்தில் சாலை போடப்பட்டது . பிறகு எத்தனை முறையோ அதிகாரிகளை அணுகியும் பயனில்லை. இச்சாலை மிகவும் மோசமாக உள்ளது. அதேபோல் மின்விளக்குகளும் எட்டு மாதங்களாக எரிவதில்லை. மின்கம்பங்கள் கிழே விழும் நிலையில் உள்ளது. சம்பந்தபட்ட அதிகாரில் உடனே இம்மூன்றையும் கவனிக்க வேண்டுகிறோம். அதே பகுதியில் வாசு நகர் 2,3 மற்றும் 4வது சாலைகள் இரண்டு வருடங்களுக்கு முன்பே சிமெண்ட் சாலைகளாக போடப்பட்டது எப்படி என்று புரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.