சென்னை : சென்னையில் நடந்த ஹாக்கி போட்டியில், வருமான வரி அணி, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில், முதலாவது சென்னை மண்டல ஹாக்கி போட்டி நடந்தது. நேற்று முன்தினம் நடந்த இறுதி போட்டியில், வருமான வரி அணி, 2-1 என்ற கோல் கணக்கில், ஏ.ஜி., அலுவலக அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அரசு கூடுதல் முதன்மை செயலர் ராஜ்குமார், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.