திருப்பூர் : ""வருவாய்த்துறையுடன் இணைந்து குற்றத்தடுப்பு சட்டங்களை போலீசார் தீவிரமாக பின்பற்ற வேண்டும்,'' என கலெக்டர் வலியுறுத்தினார். அதிகாரிகள் பங்கேற்ற சிறப்பு கலந்தாய்வு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் கோவிந்தராஜ் பேசுகையில்,
""உழவர் பாதுகாப்பு திட்டம், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட திட்டங்களை சிறப்பு கவனம் எடுத்து செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.""வருவாய்த்துறையுடன் இணைந்து, போலீசாரும், குற்றத்தடுப்பு சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும். குற்றங்களை தடுக்க வேண்டிய பொறுப்பு, வருவாய்த்துறைக்கும், போலீசுக்கும் இருப்பதால், இரு துறையினரும் இணைந்து, குற்றத்தடுப்பு சட்டங்களை கண்காணித்து பின்பற்ற வேண்டும்,''
என்றார்.வருவாய்த்துறை, போலீஸ், வேளாண் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.