திருப்பூர் : திருப்பூர்
மாநகராட்சியில் உள்ள 179 குடிசைப்பகுதிகளில், விடுபட்டுள்ள 77 குடிசை
பகுதி மக்களின் வாழ்வாதார நிலை குறித்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
திருப்பூர்
மாநகராட்சி பகுதியில், அடிப்படை வசதிகளில் பின்தங்கியுள்ள குடிசை பகுதிகள்
88 உள்ளன. அப்பகுதி மக்கள் வசதிக்காக, லாரிகள் மூலமாக குடிநீர் சப்ளை
செய்யப்படுகிறது. பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,
தமிழக அரசு உத்தரவுப்படி, குடிசை பகுதி மக்களின் வாழ்வாதார நிலை குறித்த
கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி பகுதியில்
இருந்த 88 குடிசை பகுதிகள்; புதிதாக கண்டறியப்பட்ட 14 குடிசை பகுதிகள் என
மொத்தமுள்ள 102 குடிசைப்பகுதிகளில், 2010ல் கணக்கெடுப்பு
நடத்தப்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி சென்னையில் நடந்த நகராட்சி நிர்வாக
கமிஷனரக ஆலோசனை கூட்டத்தில், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடிசை
பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டது.
அதன்படி,
மாநகராட்சியுடன் இணைந்துள்ள பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள 77 குடிசை
பகுதிகளில் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. அப்பகுதி மக்களின் வாழ்வாதார
நிலையை கண்டறியும் வகையில், கணக்கெடுப்பு நடத்த 15 ஆயிரம் விண்ணப்பங்கள்
அச்சிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.