குன்றத்தூர்:சாலையில்
நடந்து சென்ற போது தடுக்கி விழுந்தவர், மாநகர பேருந்து சக்கரத்தில் சிக்கி
உயிரிழந்தார்.குன்றத்தூர், முத்துசாமி முதலி தெருவைச் சேர்ந்தவர் வேலு,
41. "டைல்ஸ்' ஒட்டும் தொழில் செய்து வந்தார். நேற்று காலை குன்றத்தூர்
பிரதான சாலையில் நடந்து சென்ற இவர், சாலையில் இருந்த கல் தடுக்கி, சாலையின்
வலதுபுறம் விழுந்தார்.அப்போது தாம்பரத்தில் இருந்து வெள்ளவேடு நோக்கி
சென்ற, தடம் "566ஏ' மாநகர பேருந்து, வேலுவின் உடல் மீது ஏறியது. இதில்,
சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு
போலீசார் விசாரிக்கின்றனர்.