திரிசூலம்:புறப்பட
இருந்த நேரத்தில் இயந்திர கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், "ஏர் இந்தியா'
சிங்கப்பூர் விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னையில்
இருந்து 260 பயணிகளுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு "ஏர்
இந்தியா' விமானம் சிங்கப்பூர் செல்ல இருந்தது.
விமானத்தில் பயணிகள் ஏறி
அமர்ந்த நிலையில், விமானம் புறப்பட தயாராக இருந்தது.அப்போது விமானத்தில்
இயந்திர கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த விமானத்தை இயக்க
முடியாது என்று விமானி தெரிவித்தார். பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து
கீழே இறக்கப்பட்டு, பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.விமானம்
பழுது பார்க்கப்பட்டு, நேற்று மதியத்திற்கு மேல் புறப்படும் என்று
அறிவிக்கப்பட்டது.