சென்னை:வேளச்சேரி
பகுதியில், குடிநீர் குழாய் இணைப்பு பணியால், தொடர்ந்து இரண்டு
நாட்களுக்கு, குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது.
வேளச்சேரி,
நூறடி புறவழி சாலையில், பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி, நடக்க
உள்ளது. இதனால், நாளை மாலை, 7:00 மணி முதல், 28ம் தேதி காலை, 6:00 மணி வரை,
வேளச்சேரி, கிண்டி மடுவங்கரை பகுதிகளில், குடிநீர் வினியோகம்
பாதிக்கப்படும் என, சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.
குடிநீர்
பெறுவதில் சிரமம் ஏற்பட்டால், 81449 30913 மற்றும் 2441 6341 என்ற
எண்களில், பகுதி பொறியாளரை தொடர்பு கொண்டு, லாரிகள் மூலம் பொதுமக்கள்
குடிநீர் பெறலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.