புழல்:அகதிகள் முகாமில் உள்ளவர்கள் யாரேனும் கந்து வட்டி பிரச்னையில் சிக்கி உள்ளனரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை
புழல் காவாங்கரையில் இலங்கை அகதிகள் முகாமில், 396 குடும்பத்தை சேர்ந்த
480 ஆண்கள், 458 பெண்கள், சிறுவர், சிறுமியர் உட்பட 155 ஆண் குழந்தைகள்,
152 பெண் குழந்தைகள் என, மொத்தம் 1, 239 பேர் உள்ளனர். அவர்களுக்கு ரேஷன்
முறையில் உணவு பொருள், உதவி தொகை ஆகியவற்றை அரசு வழங்கி
வருகிறது.இந்நிலையில் அவர்கள், குடும்ப தேவைக்காக பெட்டிக்கடை, மூட்டை
தூக்குதல், ஓட்டுனர், வாகன உதவியாளர் உள்ளிட்ட தங்களால் இயன்ற வேலையை
செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர். ஆனாலும் பிள்ளைகளின் கல்வி கட்டணம்,
மருத்துவம், திருமணம் உள்ளிட்ட குடும்ப விழாக்களின் செலவுக்காக தேவைப்படும்
கூடுதல் பணத்தை, வெளிநபர்களிடம் கடனாக பெறுகின்றனர்.கந்து வட்டிஅதற்கு
அசலுடன் வட்டியும் செலுத்தி வருகின்றனர். சிலர் வாங்கிய கடனை குறித்த
காலத்திற்குள் திரும்ப செலுத்த முடியாததால், கூடுதல் வட்டி மற்றும் கந்து
வட்டியில் சிக்கி கொள்ளும் அபாயம் ஏற்பட்டு விடுகிறது. இதனால் அவர்கள்
பல்வேறு நெருக்கடிக்கு ஆளாகின்றனர்.கந்து வட்டி பிரச்னையில், அகதிகள்
சிக்கி விடக் கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சென்னை
"கியூ' பிரிவு போலீசார் மேற்கொண்டுள்ளனர். எச்சரிக்கைகடனுதவி செய்பவர்கள்
குறித்து விசாரித்து, தடை செய்துள்ளனர். மேலும் முகாமின் அறிவிப்பு
பலகையில், அது பற்றிய எச்சரிக்கை தகவலையும் எழுதி உள்ளனர்.இது பற்றி
முகாமை சேர்ந்த ஒருவர் கூறுகையில்,""மருத்துவ சிகிச்சை, பிள்ளைகளின்
கல்விக்கான ஆண்டு கட்டணத்தை மொத்தமாக செலுத்த வேண்டியிருப்பதால், கடன்
வாங்குகிறோம். ஆனால் இதுவரையில் விரும்ப தகாத சம்பவம் ஏதும் நடக்கவில்லை,''
என்றார்.