சென்னை:மெட்ரோ
ரயில் பாதை அமைக்கும் பணியில், பல்வேறு நிலையங்களில் மொத்தமாக இதுவரை, அரை
கி.மீ., தூரம் சுரங்க பாதை அமைக்கும் பணி முடிந்துள்ளது.சென்னை மெட்ரோ
ரயில் திட்டத்தில், 24 கி.மீ., தூரம் சுரங்க பாதையில் அமைகிறது. நேரு
பூங்கா, வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து, சுரங்க பாதை
அமைக்கும் பணி நடந்து வருகிறது.நேரு பூங்காவிலிருந்து அமைக்கப்பட்டு வரும்
முதல் சுரங்க பாதை, 266.04 மீ., தூரமும், இரண்டாவது பாதை, 76.08 மீ.,
தூரமும், வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து அமைக்கப்படும்
முதல் சுரங்க பாதை, 239.04 மீ., தூரமும், இரண்டாவது சுரங்க பாதை, 35 மீ.,
தூரமும், மே தின பூங்காவிலிருந்து அமைக்கப்படும் முதல் பாதை, 9.06 மீ.,
தூரமும் என, நேற்று வரை மொத்தம், 629.02 மீ., தூரம் சுரங்க பாதை
அமைக்கப்பட்டு உள்ளது.
இத்துடன், நேரு பூங்கா மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ
ரயில் நிலையங்களின் கட்டுமான பணியும் நடந்து வருகிறது. நேரு
பூங்காவில்,மேல் தளப்பகுதி கான்கிரீட் தளம் அமைக்கும் பணி முடிந்து, மெட்ரோ
ரயில் நிலையத்திற்கான, கீழ் தளத்திற்கான சிமென்ட் கான்கிரீட் தளம்
அமைக்கும் பணிகள், இரவு பகலாக நடந்து வருகின்றன.