அரசு புத்தகக் கண்காட்சி துவக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 டிச
2012
01:38

புதுச்சேரி:கலை பண்பாட்டுத் துறை சார்பில், புத்தகக் கண்காட்சி, ஆனந்தா திருமண மண்டபத்தில் நேற்று துவங்கியது.புத்தகக் கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி, துவக்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் அமைச்சர் தியாகராஜன், நந்தா சரவணன் எம்.எல்.ஏ., கலை பண்பாட்டு துறை செயலர் ஸ்ரீகாந்த், இயக்குனர் மலர்க்கண்ணன், உதவி நூலக தகவல் அதிகாரி பசுவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அடுத்த மாதம் 2ம் தேதி வரை நடக்கும் இக்கண்காட்சியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 100 முன்னணி புத்தக விற்பனையாளர்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட அனைத்து மொழி நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அரசு நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள், மருத்துவம், பொறியியல் சார்ந்த நூல்கள், கவிதை, சிறுகதை, நாவல் முதலான இலக்கிய நூல்கள் இக்கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்கான அகராதிகள், அட்லாஸ் போன்ற புத்தகங்கள், கல்வி தொடர்பான குறுந்தகடுகள், சிறுகுழந்தைகளுக்கான அறிவு சார்ந்த விளையாட்டுப் பொருட்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

புத்தகக் கண்காட்சி, தினசரி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குவோருக்கு பதிப்பாளர்கள், விற்பனையாளர்களின் சார்பில்10 சதவீதமும், அரசு மானியாக 15 சதவீதமும் என மொத்தம் 25 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.புத்தகம் வாங்குவோருக்கு, பதிப்பகத்தாரின் சார்பில் நாள்தோறும் சிறப்புப் பரிசுகளும் முன்னணி நிறுவனங்கள் புத்தகம் வாங்குவோர்களுக்கு அதிர்ஷ்டப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. புதுச்சேரி, தமிழகத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murugavel - villupuram,இந்தியா
25-டிச-201210:18:45 IST Report Abuse
murugavel மக்களிடம் படிக்கும் ஆர்வத்தை ஏற்ப்டத்தவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.