துறைமுகத்தில் கன்டெய்னர்கள் முடங்கும் அபாயம் : லாரி உரிமையாளர்கள் போராட்டம் தொடர்கிறது
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 டிச
2012
22:37

சென்னை : துறைமுக நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், "டிரெய்லர்' லாரி உரிமையாளர்களின் போராட் டம் நேற்று இரண்டாவது நாளா கவும் நீடித்தது. போராட்டம் தொடர்வதால், துறைமுகத்தில் சரக்கு பெட்டகங்கள் (கன்டெய்னர்) முடங்கி, வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு துறை என்றாலே...சென்னை துறைமுகத்தில் கட்டமைப்பு வசதிகள் மீது கவனம் செலுத்தப்படாததால், உயர்ந்து வரும் வர்த்தகத்திற்கு துறைமுகத்தால் ஈடு கொடுக்க முடியவில்லை.
போதிய சாலை விரிவாக்க பணிகளும் இல்லாததால், சரக்கு பெட்டகங்களை ஏற்றி செல்லும் "டிரெய்லர்' லாரிகளால் வடசென்னை சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. எதிர்பாராத விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் படி, பொதுமக்கள், தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். அவற்றினால், சென்னை - எண்ணூர் துறைமுக இணைப்பு சாலை விரிவாக்கம்= திருவொற்றியூரில், 11 ஏக்கரில் பெட்டக நிறுத்தம் அமைத்தல்= துறைமுகத்தினுள் பெட்டக நிறுத்த வசதி போதிய அளவில் வாசல்களை அதிகப்படுத்துதல்உள்ளிட்ட அறிவிப்புகளை துறைமுகம் வெளியிட்டது.இந்த பணிகள் எல்லாம் மந்த கதியில்தான் நடக்கின்றன. எதிர்பார்த்த வேகம் இல்லை. துறைமுக நிர்வாகம், போதிய முயற்சிகளை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதாக, வர்த்தகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.திடீர் போராட்டம் இந்த நிலையில், துறைமுக இணைப்பு விரிவாக்க பணிகளை விரைவு படுத்த வேண்டும்.= கோர்ட் விதிமுறைப்படி, ஒரே லாரியில் இரண்டு சரக்கு பெட்டகங்கள் ஏற்றுவதை கைவிட வேண்டும்.= தேவையான உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை "டிரெய் லர்' லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல், திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர். இதனால், சரக்கு ஏற்றி வரும் லாரிகள், எண்ணூர் கடற்கரை சாலை, மணலி நெடுஞ்சாலை, மணலி-பொன்னேரி நெடுஞ்சாலை ஆகியவற்றில் நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றன. வேலை நிறுத்தத்தால், இந்த பகுதியில், போக்குவரத்து நெரிசல் கடுமையாக அதிகரித்து உள்ளது. பேச்சுவார்த்தை தோல்வி துறைமுகத்தில் சரக்குகள் தேங்கும் சூழல் ஏற்பட்டதால், சென்னை துறைமுக துணை தலைவர் பரிதா, "டிரெய்லர்' லாரி உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஒரே லாரியில், இரண்டு 20 அடி சரக்கு பெட்டகங்களை ஏற்றுவதை கைவிட வேண்டும் என, லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தினர். சரக்குகள் தேங்காமல் இருக்க, இந்த நடைமுறை பின்பற்றப் படுகிறது என கூறி, துறைமுக நிர்வாகம் இதை ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. நேற்று, இரண்டாவது நாளாகவும் போராட்டம் நீடித்தது. போராட்டம் இரண்டு நாட்களாக தொடர்வதால், துறைமுத்திற்கு எந்த "டிரெய்லர்' லாரியும் செல்லவில்லை. துறைமுகத்தில் இருந்து வெளியேற்றப் பட வேண்டிய, 6,000த்துக்கும் மேற்பட்ட இறக்குமதி சரக்கு பெட்டகங்கள் தேங்கியுள்ளன. வர்த்தகம் பாதிப்பு ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய சரக்கு, பெட்டக முனையங்களில் தேங்கியுள்ளது. இதனால், துறைமுகம் மூலம் நடக்கும் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இது போன்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன் துறைமுக லாரி டிரைவர்கள் ஐந்து நாட்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, தேங்கிய சரக்குகளை வெளியேற்றினால்தான், ஏற்றுமதி கன்டெய்னர்களை உள்ளே கொண்டு செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ஒரு வாரத்திற்கு ஏற்றுமதி நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.அத்தகைய நிலை ஏற்படுவதற்கு முன்னரே, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, துறைமுக நிர்வாகம் முயல வேண்டும் என, வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலை விரிவாக்கம் என்னாச்சு? சாலை விரிவாக்க பணிகள் முடிந்தால்தான், துறைமுக லாரிகளால் ஏற்படும் நெரிசல் தீரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை-எண்ணூர் துறைமுக இணைப்பு சாலையை, 600 கோடி ரூபாயில் மேம்படுத்தும் திட்டம், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முடியும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், 50 சதவீத பணிகள் கூட இன்னும் முடியவில்லை.1,816 கோடி ரூபாயிலான, துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலைக்காக கூவம் கால்வாய் பகுதியில், ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியதும், நீரோட்டம் பாதிக்கப்படுவதாக கூறி தமிழக அரசு, கடந்த மார்ச் 30ம் தேதி தடை விதித்து. பல கட்ட பேச்சு நடந்தும் தடை நீங்காததால், பணிகள் முடங்கியுள்ளன.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - chennai,இந்தியா
29-டிச-201215:24:47 IST Report Abuse
Indian The subject was highlighted by 'The hindu business line on 27 Dec 2004. Still no action plan for the subject. Recently Mr.Vasan too o p e n some ____ from a hotel in the city, intead of going to ennore port!!! Soon one more L&T Port going to o p e n !!! Then what will happen??//
Rate this:
Share this comment
Cancel
ராமக்கண்ணன் - தமிழ்நாடு,இந்தியா
26-டிச-201211:39:36 IST Report Abuse
ராமக்கண்ணன் ஹாய் தினமலர் வாசகர் கருதுக்கு நன்றி நீங்கள் கல்வி சேதிகளை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.