Advertisement
தினமலர் முதல் பக்கம் » சென்னை மாவட்டம் »முக்கிய செய்திகள் செய்தி
ஆறு மாடிகளுடன் கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனை தயாராகிறது
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2012,22:38 IST

சென்னை : கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனை பணியில், 60 சதவீதம் முடிந்து விட்டது. அடுத்தாண்டு அக்டோபருக்குள் முழு பணியும் முடிக்கப்பட்டு விடும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை, மெட்ரோ ரயில் திட்டத்தில், 45 கி.மீ., தூரம், மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இப்பாதை, 24 கி.மீ., தூரம் சுரங்க பாதையிலும், 21 கி.மீ., தூரம் மேம்பாலத்திலும் அமைகிறது.இத்திட்டத்தில், மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட, தேவையான அனைத்து வசதிகளுடன், கோயம்பேட்டில், மெட்ரோ ரயில் பணி மனை (யார்டு) 198.10 கோடி ரூபாய் செலவில், "எல் அண்ட் டி' நிறுவனம் மூலம் கட்டப்பட்டு வருகிறது. இதில், மெட்ரோ ரயில் இயக்கத்திற்கான நிர்வாக கட்டடம், ஒரு லட்சம் சதுர அடியில், ஆறு மாடிகளுடன் கட்டப்படுகிறது. இதில், கட்டடம் மற்றும் மாடிகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து, பக்கவாட்டு சுவர்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.இக்கட்டடத்தில், எதிர்கால தேவைகளை வைத்து, மேலும் நான்கு மாடிகளை கட்டிக் கொள்ள முடியும். மேலும் இதில், மெட்ரோ ரயில்கள் போக்குவரத்துக்கான, நவீன கட்டுப்பாட்டு அறை உட்பட, அனைத்து நிர்வாக அலுவலகங்களும் அமைகின்றன.மெட்ரோ ரயில்கள் நிறுத்தி வைக்கப்படுவதற்கு ஏதுவாக, 20 ஆயிரம் ச.மீ., பரப்பளவில், 12 நடைமேடைகளுடன், பிரமாண்ட கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. ரயில்களுக்கு தனிஅதில் தற்போது, சிமென்ட் தூண்கள் அமைக்கும் பணி முடிவடைந்து, நவீன தொழில்நுட்பத்தில், மேற்கூரை அமைப்பதற்கான பணிகள், நடந்து வருகின்றன. பிப்ரவரி மாதத்திலிருந்து ரயில் பாதை அமைக்கும் பணி துவங்கும். மெட்ரோ ரயில்கள் பராமரிப்பதற்கு, ஆறு நடைமேடைகளுடன், பழுது பார்க்கும் மைய (ஒர்க் ஷாப்) கட்டடம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இம்மையத்தில், தானியங்கி முறையில், ரயில் பெட்டிகள் சுத்தம் செய்யப்படுவதற்கான நவீன வசதிகள் அமையும். சாய்தள பாதை திருமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து, கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனை வரை, சாய்தள பாதை அமைக்கப்பட்டு வருகிறது.இப்பாதையில் பூந்தமல்லி சாலை பகுதியை தவிர, மற்ற பகுதிகளில் பாதை அமைக்கப்பட்டு விட்டது. இப்பாதை, பணிமனை வளாகத்திற்குள், 500 மீ., தூரம் வரை அமைக்கப்படுகிறது. கோயம்பேடு ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள், திருமங்கலம் நோக்கி சென்று, பிறகு பின்னோக்கி, பணி மனைக்கு செல்லும் வகையில், இந்த சாய்தள பாதை அமைக்கப்படுகிறது. பணிமனை பகுதியில், சாய்தள பாதை முடியும் இடத்திலிருந்து, மெட்ரோ ரயில்கள் பெட்டிகளை இயக்கி பார்ப்பதற்கு "டெஸ்ட் ட்ராக்' அமைப்பதற்கு ஏதுவாக, 850 மீ., தூரத்திற்கு, சிமென்ட் கான்கிரீட் பாதை அமைக்கும் பணி முடிந்துள்ளது. சிக்னல் வைப்பதற்கான இடங்களிலும், கான்கிரீட் அமைப்புகள் அமைக்கப்படுகின்றன. பாதை நெடுகிலும், மின் கம்பங்களும் நடப்பட்டுள்ளன. இப்பாதையில், "டெஸ்ட் ட்ராக்'அமைக்கும் பணி, வரும் பிப்ரவரி மாதத்திலிருந்து துவங்கப்பட உள்ளது. பணிகள் குறித்து, "எல் அண்ட் டி' நிறுவன அதி காரி கூறுகையில், ""கோயம்பேடு பணிமனை பணிகளில், கட்டுமான பணிகளை எங்கள் நிறுவனமும், ரயில் பாதைகள் அமைக்கும் பணிகளை "ஆல்ஸ்டாம்' நிறுவனமும் செய்கின்றன. இப்பணிகள் அனைத்தும், வரும், 2013ம் ஆண்டு அக்டோபர் மாத்திற்குள் முடிக்க, திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள்:


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.