ஈஞ்சம்பாக்கம் : ஈஞ்சம்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலையில் சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனரின் கார் மீது, சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன். தற்போது, மனித உரிமைகள் ஆணையத்தில் ஏ.டி.ஜி.பி.,யாக உள்ளார். இவரது வீடு ஈஞ்சம்பாக்கத்தில் உள்ளது. நேற்று காலை, கிழக்கு கடற்கரை சாலையில் கமிஷனரின் கார் சென்று கொண்டிருந்தது. ராமச்சந்திரன் என்ற காவலர் காரை ஓட்டினார். அப்போது பின்னால் வந்த சரக்கு ஆட்டோ ஒன்று, திடீரென கார் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவை ஓட்டி வந்த மோதிபாபு, 30, மற்றும் பிரகதீஷ், 28 ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.