திரிசூலம்
: சிங்கப்பூரில் இருந்து, 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான கணினி உதிரி
பாகங்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.சிங்கப்பூரில் இருந்து நேற்று
முன்தினம் இரவு 10.30 மணிக்கு சென்னை வந்த "சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' விமான
பயணிகளை சென்னை விமான நிலையத்தில் சுங்க துறை அதிகாரிகள் சோதித்தனர்.
இதில்,
புதுச்சேரியை சேர்ந்த சுந்தரராஜ், 40 என்ற பயணியின் உடைமைகளை, அதிகாரிகள்
சோதித்தனர். அப்போது அவரது பைகளில், கணினி உதிரி பாகங்கள், கேமரா, கிரெடிட்
கார்டு ஆகியவை இருந்தன. முறைகேடாக கொண்டு வரப்பட்ட இந்த பொருட்களின்
மதிப்பு 16 லட்சம் ரூபாய். சுந்தரராஜை கைது செய்த அதிகாரிகள், அவரிடம்
விசாரிக்கின்றனர்.தங்கம் கடத்தியவர் கைதுகொழும்பில் இருந்து "ஏர்-இந்தியா'
விமானம் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை
சென்னை விமான நிலைய சுங்க துறை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது, சென்னை,
சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த முகம்மது இஸ்மாயில், 37 என்ற பயணி மீது
அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடைமைகளை பரிசோதித்த போது,
முறைகேடாக, ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க செயின், "பிரேஸ்லெட்டு'கள்
இருப்பது தெரியவந்தது. முகம்மது இஸ்மாயிலை கைது செய்து, சுங்க துறை
அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.