ஆலந்தூர் : சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்த ஆட்டு இறைச்சியை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆதம்பாக்கம்,
ஆலந்தூர் ஆகிய இடங்களில் உள்ள இறைச்சி கடைகளில், கால்நடை மருத்துவர்
உதவியுடன், மாநகராட்சி சுகாதார நல அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.
இதில், சில கடைகளில் முத்திரை இல்லாமல், சுகாதாரமற்ற ஆட்டு இறைச்சி விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து,
33 கிலோ சுகாதாரமற்ற இறைச்சியை மாநகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்து,
பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டி கிருமி நாசினி மூலம் அழித்தனர்.
தொடர்ந்து விற்பனை செய்தால் கடைக்கு "சீல்' வைக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.