சென்னை : வேலைக்கு செல்லாமல் திரிந்த வாலிபர், தாய் கண்டித்ததால் தீக்குளித்தார்.
தண்டையார்பேட்டை,
அஜீஸ் நகரை சேர்ந்தவர், செல்வக்குமார் மகன் ராஜேஷ், 15. படிப்பு சரியாக
வராததால், பெற்றோர் இவரை வேலைக்கு அனுப்பினர். கடந்த சில நாட்களாக வேலைக்கு
செல்லாமல், நண்பர்களுடன் சுற்றிய ராஜேஷை, தாய் ஜெயந்தி கண்டித்தார்.
இதனால்,
மனமுடைந்த ராஜேஷ், உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
ஆபத்தான நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்,
சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆர்.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.