ஆவடி : ஆவடி
நகராட்சியில் கால்நடைகளை அவிழ்த்து விட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை
மீறினால், அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆவடியில்
சி.டி.எச்., சாலை, எச்.வி.எப்., சாலை, பூந்தமல்லி சாலை உள்ளிட்ட
நகராட்சியின் பெரும்பாலான இடங்களில், நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகள் சுற்றி
திரிகின்றன. இவற்றால், அடிக்கடி விபத்து ஏற்படுவதுடன் போக்குவரத்தும்
பாதிக்கப்படுகிறது.
மாடுகளின் போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என,
நகராட்சிக்கு பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நகராட்சி
பகுதியில் கால்நடைகளை அவிழ்த்து விட, நகராட்சி நிர்வாகம் தடை
விதித்துள்ளது.
இதையும் மீறி, ஆடு, மாடுகளை சாலையில் திரியவிட்டால்,
அவற்றை பிடித்து பட்டியில் அடைப்பதுடன், உரிமையாளருக்கு அபராதமும்
விதிக்கப்படும் என, நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.