ஆவடி : "தினமலர்' செய்தி எதிரொலியாக, ஆவடி பேருந்து நிலைய மேற்கூரையில், சேதம் அடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டன. ஆவடி பேருந்து நிலையத்தில் அமைக்கப்
பட்டிருந்த,
கல்நார் மேற்கூரையில் (ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்) ஆங்காங்கே ஓட்டை விழுந்தது.
மேற்கூரையின் ஒரு இடம் 7 அடி நீளத்துக்கு திறந்தே கிடந்தது.இது
குறித்து "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, நேற்று
மேற்கூரையில் சேதம் அடைந்த பகுதிகளை மாற்றும் பணி துவங்கியது.