சென்னை : மணலியில், போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்மணலி சின்னசேக்காடு, பார்த்தசாரதி தெருவில் நகை அடகு கடை நடத்துபவர் லக்மல்,35. இவரிடம், மணலி சின்னசேக்காடு, திருவள்ளுவர் தெருவை சேர்ந்த அழகர்சாமி, 52, வெள்ளி அரைநாண் கயிற்றை அடகு வைத்து பணம் கேட்டார். சந்தேகமடைந்த கடை உரிமையாளர் லக்மல், நகையை ஆய்வு செய்ததில் போலி நகை என, தெரியவந்தது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். மணலி போலீசார் போலி நகையை அடகு வைத்து, மோசடியில் ஈடுபட்ட அழகர்சாமியை கைது செய்தனர். கைதானவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.