சென்னை : சென்னையில் இன்று, தேசிய அளவிலான வில்வித்தை போட்டி துவங்குகிறது.
தமிழ்நாடு வில்வித்தை சங்கம் சார்பில், 33வது தேசிய அளவிலான வில்வித்தை போட்டி, சென்னை அண்ணா பல்கலைக்கழக மைதானத்தில் நடக்க உள்ளது. இப்போட்டி, இன்று துவங்கி, 31ம் தேதி வரை, காலை 8 மணி முதல், மாலை 6 மணி வரை நடக்கும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும், ராணுவம், எல்லை பாதுகாப்பு படை, ரயில்வே உள்ளிட்ட 16 துறைகளைச் சேர்ந்த, 600 பேர் போட்டியில் பங்கேற்கின்றனர்.