சென்னை : பெரம்பூரில் ஜன.,1ம் தேதி முதல் பொங்கல் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து, பெரம்பூர் தாசில்தார் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:பெரம்பூர் தாசில்தார் அலுவலகத்தின் எல்லைக்கு உட்பட்ட, 1.50 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு, பொங்கல் இலவச வேட்டி சேலைகள், அந்தந்த பகுதி ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.ஜன.,1 ம் தேதி முதல், பொதுமக்களுக்கு அவை வினியோகிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.