சென்னை : சென்னையில் நடக்கும் அகடமிகளுக்கான கிரிக்கெட் போட்டியில், அருணா அகடமி அணி வெற்றி பெற்றது.பிரண்ட்ஸ் கிரிக்கெட் அகடமி சார்பில், 16 வயதிற்கு உட்பட்டோருக்கான, "பிரண்ட்ஸ் கோப்பை' லீக் மற்றும் நாக்-அவுட் கிரிக்கெட் போட்டிகள், சென்னையில் நடக்கின்றன. இதில், முதலில் விளையாடிய ஜெயின் ஜூனியர் அகடமி, 20 ஓவரில், ஏழு விக்கெட் இழப்பிற்கு, 139 ரன் எடுத்தது.அடுத்து விளையாடிய அருணா அகடமி, 17.4 ஓவரில், ஆறு விக்கெட் இழப்பிற்கு, 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பொன் வித்யாஷ்ரம் அணி, ஜெயின் ஜூனியர் அணியையும்; சார்மிங் ஸ்டார் அணி, ராமகிருஷ்ணா அணியையும் வீழ்த்தின.