வில்லியனூர் : வில்லியனூர் தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் லட்சுமண கிருஷ்ணா திருமண நிலையத்தில் நடந்தது. கூட்டத்திற்கு
தொகுதி செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். இளைஞர் அணி அமைப்பாள்
மணிகண்டன் வரவேற்றார். மாநில அமைப்பாளர் டாக்டர் சுப்ரமணியன் பேசும்போது,
"2016ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க., தனித்துப் போட்டியிடும்.
ஆளும் என்.ஆர். காங்., அரசு மக்கள் விரோத ஆட்சியையே செய்து வருகிறது. முன்னாள்
ஆட்சி செய்த காங்., அரசும் மக்களுக்கு எந்தத் தொலைநோக்கு திட்டத்தையும்
கொண்டுவரவில்லை. இதனால் மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டுள்ள
தி.மு.க., வரும் தேர்தலில் தனித்து நின்று ஆட்சியைப் பிடிக்கும்' என்றார்.
நிகழ்ச்சியில்,
மாநில தி.மு.க., பொருளாளர் கென்னடி, செல்வம், தலைமை பொதுக்குழு உறுப்பினர்
உருவையாறு பழனி, பாலசுப்ரமணியன், சோமசுந்தரம், தொகுதி தி.மு.க.,
பிரமுகர்கள் குமார், மண்ணாங்கட்டி, பூக்கடை சண்முகம் உள்ளிட்டோர்
கலந்துகொண்டனர்.