புதுச்சேரி : வங்கி உதவி மேலாளர் பையை திருடிய மர்ம நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
சின்னக்கடை
பகுதியில் உள்ள கத்தோலிக் சிரியன் வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றி
வருபவர் ஆன்னி மேனன். இவர் நேற்று முன்தினம் தனது குழந்தையுடன் உப்பளம்
விளையாட்டு மைதானத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
அப்போது
அவரது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த கைப்பையை மர்ம நபர்கள் திருடிச்
சென்றனர். இதில் வங்கி சாவி, வீட்டு சாவி, ஏ.டி.எம்., கார்டு, பேன் கார்டு
உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளன.
புகாரின் பேரில் ஒதியஞ்சாலை சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.