புதுச்சேரி : தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற் பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.முதலியார்பேட்டை
சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் கடலூர் சாலையில்
ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். ஏ.எப்.டி., மில் அருகே சுந்தரராஜா வீதியைச்
சேர்ந்த ரவி, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து
கொண்டிருந்தார்.
அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ. 4500 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும் 450 ரூபாயை பறிமுதல் செய்தனர்.