Advertisement
ஆதி திராவிடர் நலத்துறை முன் தர்ணா
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 டிச
2012
03:53

புதுச்சேரி :ஆதிதிராவிடர் நலத்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில், கோரிக்கைககளை வலியுறுத்தி தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகம் முன்பு நேற்று தர்ணா நடந்தது. சங்க தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் அருள்தாஸ் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஏழுமலை வரவேற்றார். அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சேஷாச்சலம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைளை வலியுறுத்தி பேசினார். கூட்டமைப்பு பொறுப்பாளர் பரிமளரங்கம் மற்றும் சங்கத்தைச் சேர்ந்த நடேசன், மனோகர், பன்னீர்செல்வம், சொக்கலிங்கம், ராமன், வள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி சமையல் பணியாளர் பதவிக்கு 1900 ரூபாய் கிரேடு சம்பளம் வழங்க வேண்டும். உதவி வார்டன் பதவிகளை சமையல் மற்றும் உதவி சமையல் பணியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். 100 பேருக்கு மேல் உள்ள விடுதிகளுக்கு தலைமை சமையல் பணியாளர் பதவியை உருவாக்க வேண்டும். விடுபட்ட அனைவருக்கும் ஏசிபி மற்றும் எம்ஏசிபி வழங்க வேண்டும். சமையல், உதவி சமையல்பணியாளர்கள் மற்றும் தினக்கூலி, பகுதிநேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்
பட்டன.

 

மேலும் புதுச்சேரி செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.