சென்னை : நடுக்கடலில் தவிக்கும் பிரதிபா வருணா கப்பல் ஊழியர்களுக்கு, கடல் சீற்றம் காரணமாக, உணவு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
பிரதிபா
ஷிப்பிங் நிறுவனத்துக்கு சொந்தமான, பிரதிபா காவேரி கப்பல் மீட்கப்பட்ட
நிலையில், மற்றொரு கப்பலான, பிரதிபா வருணா, நடுக்கடலில் தத்தளிக்கிறது.
கடன்
தொடர்பான வழக்கில், சென்னை துறைமுகம் அருகே, கடந்த, அக்., 7ம் தேதி முதல்,
நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள அக்கப்பலில், 24 ஊழியர்கள் உள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக, நடுக்கடலில் தவிக்கும் ஊழியர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்டவை சரியாக சென்றடையவில்லை.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்,
"பிரதிபா வருணா' கப்பல் ஊழியர்களுக்கு, உணவு கொண்டு செல்லப்படும்' என, கடல் சார் வணிக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால்,
தற்போது ஏற்பட்டுள்ள கடல் சீற்றதால், அவர்களுக்கு உணவு கொண்டு செல்வதில்,
சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால், கப்பலில் உள்ளவர்கள், உணவு, தண்ணீர்
இன்றி, மிகவும் சிரமப்படும் சூழல் உருவாகி உள்ளது.