சென்னை : கொடுங்கையூரில் நிறுத்தப்பட்டு இருந்த, எட்டு லாரிகளின் பேட்டரி மற்றும் செம்பு கம்பிகளை, மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். கொடுங்கையூர்,
திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சொந்தமான, 10க்கும் மேற்பட்ட
குப்பை அள்ளும் லாரிகள், மாநகராட்சிக்காக ஒப்பந்த முறையில் ஓடுகின்றன.
நேற்று முன்தினம் குப்பை அள்ளும் பணி முடித்த, எட்டு லாரிகள், கொடுங்கையூர்
குப்பை வளாகம் அருகே நிறுத்தப்பட்டு இருந்தன.
நேற்று காலை, லாரிகளை
அங்கிருந்து எடுக்க சென்ற ஓட்டுனர்கள், லாரியின் கதவுகள்
உடைக்கப்பட்டதுடன், உள்ளே இருந்த, 40 ஆயிரம் ரூபாய் மதிப்பு பேட்டரி
மற்றும் செம்பு கம்பிகள் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து,
உரிமையாளர் சேகருக்கு தகவல் அளித்தனர். லாரிகளை பார்வையிட்ட சேகர்,
கொடுங்கையூர் போலீசில் புகார் அளித்தார். கொடுங்கையூர் குப்பை வளாக
வாயிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில், பேட்டரியை திருடி சென்ற வர்களின்
உருவம் பதிவாகி உள்ளது. இதை வைத்து, போலீசார் விசாரணையை மேற்கொண்டு
உள்ளனர்.