ஆவடி : கோவில் அலுவலக அறையின் பூட்டை உடைத்து, 40 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடுகின்றனர்.
திருமுல்லைவாயில்
செந்தில்நகர், மகாத்மா காந்தி சாலையில், வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது.
கும்பாபிஷேகத்தை ஒட்டி, கோவிலில் தற்போது திருப்பணி வேலை நடக்கிறது.
நேற்று முன்தினம் இரவு, கோவில் திருப்பணி குழுவினர், கோவில் வளாகத்தில்
உள்ள அலுவலக அறையை, பூட்டி விட்டு சென்றனர்.
நேற்று காலையில் வந்து
பார்த்தபோது, அலுவலக அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 40
ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. புகாரின்படி,
திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடுகின்றனர்.
மதுரவாயலில்...
அதேபோல், மதுரவாயல் காமாட்சியம்மன் நகரில், கங்கையம்மன் கோவிலின் கதவு உடைக்கப்பட்டு, உண்டியலில் இருந்து 5,000 ரூபாய் மற்றும்
மரப்பெட்டியில் இருந்த 2,500 ரூபாய் திருடப்
பட்டிருந்தது. இதுகுறித்து, மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.