பீர்க்கண்காரணை : பணிக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து, போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
புது
பெருங்களத்தூரை சேர்ந்தவர் பிரவீணா, 24. அண்ணா சாலையில் உள்ள, தனியார்
வங்கி ஒன்றில் பணிபுரிந்தார். கடந்த 5ம் தேதி, பணிக்கு சென்ற
பிரவீணா, வீடு திரும்பவில்லை. உறவினர் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
பிரவீணாவின் சகோதரர் கொடுத்த புகாரின்படி, பீர்க்கண்காரணை
போலீசார் விசாரிக்கின்றனர்.