அம்பத்தூர் : கல்லூரி செல்லாததற்கு பெற்றோர் கண்டித்ததால், மனம் உடைந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரியை
சேர்ந்தவர் தீனன் மகன் பிரபு, 18. இவர் அம்பத்தூர் விஜயலெட்சுமிபுரத்தில்
உள்ள, தனது பெரியப்பா அட்சய மகாதேவன் வீட்டில், தங்கி, மேனாம்பேடு
பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு, நுண்ணுயிரியல் படித்து
வந்தார்.
கல்வியில் விருப்பமில்லாததால், கடந்த ஒரு வாரமாக பிரபு,
கல்லூரிக்கு செல்லவில்லை. இதுகுறித்து, கல்லூரி நிர்வாகத்தினர்,
அம்பத்தூரில் உள்ள, பிரபுவின் பெரியப்பா வீட்டுக்கு தகவல் தெரிவித்தனர். பெற்றோரும், உறவினர்களும் கல்லூரிக்கு சென்று, படிப்பை தொடருமாறு அறிவுறுத்தினர். ஆனால், பிரபு, நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, அம்பத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.