சென்னை : ரயிலில் அடிபட்டு, பீகார் வாலிபர் உட்பட இருவர் பரிதாபமாக இறந்தனர்.
பீகார் மாநிலம், பாட்னாவை சேர்ந்தவர், கேவாத் மகன் விஷ்ணு, 19. இவர், திருவொற்றியூரில், தனியார் நிறுவனம்
ஒன்றில் தங்கி பணிபுரிந்தார். திருவொற்றியூர், விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே, நேற்று தண்டவாளத்தை கடந்த இவர்,
சென்னையில் இருந்து, கும்மிடிப்பூண்டி சென்ற ரயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.
ஒடிசா
மாநிலம், காம்கார் இடத்தை சேர்ந்தவர், ஆனந்த செட்டி மகன் பஞ்சுசெட்டி, 45;
லோடுமேன். திருவொற்றியூர் வி.ஓ.சி., ரயில் நிலையம் அருகே, நேற்று
தண்டவாளத்தை கடந்த இவர், கும்மிடிப்பூண்டியில் இருந்து, சென்னை வந்த
ரயிலில் சிக்கி பலியானார்.
இருவரின் உடலையும் கைப்பற்றிய கொருக்குப்பேட்டை போலீசார், பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.