சென்னை : சென்னையில் நடக்கும், பெண்கள் சதுரங்க போட்டியில், நிவேதிதா முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு சதுரங்கம் சங்கம் ஆதரவுடன், சென்னை, எழும்பூர் எத்திராஜ் பெண்கள் கல்லூரியில், 31வது ரச்செல் பரஞ்ஜோதி நினைவு சதுரங்க போட்டி நடக்கிறது. இதில், நான்காவது சுற்று முடிவில், நிவேதிதா 4-3 என்ற புள்ளிக்கணக்கில், பிரக்ருதியை வென்று, முன்னிலை பெற்றார்.லட்சுமியும், மஞ்சுளாவும் மோதிய ஆட்டத்தில், இருவருமே தலா 3.5 புள்ளிகள் பெற்று, ஆட்டத்தை சமன் செய்தனர்.