பெண்மையை போற்றுவோம்; மதுரையில் தினமலர் நிகழ்ச்சி
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 ஜன
2013
04:32

மதுரை : பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளை தடுக்க,பெண்மையை போற்றும்வகையில், மதுரை காந்தி மியூசியத்தில் நேற்று தினமலர் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், வாசகர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஏராளமான வாசகர்கள், டில்லியில் பாலியல் பலாத்காரத்தால் உயிர்இழந்த மாணவி மற்றும் இதுவரை பாலியல் கொடுமையால் பலியான பெண்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீபம் ஏற்றினர். பூக்கள் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர். "பெண்மையை காப்போம்' என்ற தலைப்பில், மதுரை போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு பேசியதாவது:உலகில் ஆக்கத்தின் அஸ்திவாரம் பெண். பெண் சார்ந்த உறவு பெயர்கள் அனைத்துமே மூன்றெழுத்தில் தான் உள்ளது. ஆனால் இந்தியாவில் 35 சதவீத பெண்கள், பாலியல் நிர்ப்பந்தத்திற்கும், 46 சதவீத பெண்கள் வன்முறை சீண்டலுக்கும் ஆளாகின்றனர். பெண்மை புனிதத்திற்கு சமம். அதை நன்கு அறிந்தவர், புரிந்துகொண்டவர், பெண்மையை போற்றுவர். ஆண், பெண் வேறுபாடுகளைக் களைந்து சமத்துவம், சகோதரத்துவத்தோடு, மாண்போடு வழி நடத்தவே, சட்டங்கள் வலியுறுத்துகின்றன. வீட்டில் பெண் வளர்ந்தால், ஒளி கிடைக்கிறது என்று அர்த்தம். ஆனால் படிக்கின்ற காலத்தில் காதலில் அரும்பி காணாமல் போகின்றனர். 18 வயதுக்குட்பட்ட பெண்ணை, திருமணம் செய்தால் பத்தாண்டு சிறைத் தண்டனை. திருமணமான பெண்கள்,வரதட்சணை கொடுமையால் "ஸ்டவ்' வெடிப்புகள் அரங்கேற்றியதை, வரதட்சணை கொடுமைச் சட்டம் தடுத்து நிறுத்தியது. சங்க காலத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும்
கடமைகள் வரையறுக்கப்பட்டன. ஆனால் பெண்களையே விற்கத் துணிந்து, பாலியல் நிகழ்வுகள் நடந்த போது, பாலியல் தொழில் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் உடனடியாக போலீசை தொடர்புகொள்ளுங்கள். உங்களுக்கு உதவ, நாங்கள் தயாராக இருக்கிறோம்.கருவறை முதல் கல்லறை வரை, பெண்ணின் பங்கு அனைத்திலும் உள்ளது. நம் பெண்கள் தேசத்திற்கு பெரிதும் சேவை செய்கின்றனர். தாய்மையின் தனிச் சிறப்பை போற்றுவோம், என்றார்.சேடபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியை ரேணுகாதேவி:பாலியல் வன்முறையால் பெண் பாதிக்கப்படும் போது, சுற்றி
யுள்ளவர்களின் அக்கினி நாக்குகளுக்குப் பயந்தே, பிரச்னைகளை வெளிக் கொண்டுவர பயப்படுகின்றனர். பாலியல் வன்முறைக்கு அவர்கள் மட்டுமே காரணமா அல்லது வளர்ப்பும் ஒரு காரணமா? நமக்குள் இருக்கவேண்டிய மனிதநேயத்தை தொலைத்துவிட்டோம். இளம் தலைமுறைக்கும் கற்றுத்தர மறந்து விட்டோம். சொர்க்கம் விண்ணிலா இருக்கிறது? பிறருக்கு செய்யும் மனிதநேயத்தில் தான் இருக்கிறது. இளம் குற்றவாளிகள், பெற்றோரின் அரவணைப்பு கிடைக்கப் பெறாதவர்கள் தான், என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கினறன. குழந்தைகளுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து தருகிறோம். கூடி வாழ்வதை கற்றுத் தந்தோமா, மற்றவர்களின் துன்பத்தில் பங்கெடுக்க கற்றுத் தந்தோமா?சமுதாய குற்றங்கள் அதிகரிப்பதற்கு மது தான் முக்கியக் காரணம். தவறான ஒத்த ரசனை உள்ளவர்களை, கூட்டாளிகளாக்குவது தான் சமுதாய சீரழிவுக்கு காரணம். வீட்டிற்குள் பெற்றோரின் அன்புப் பிடியை மீறி தவறு செய்ய முடியாது. கல்வி வளாகத்திற்குள் ஆசிரியர்களின் கண்டிப்பை மீறி தவறு நடக்காது. தவறான நட்பு வட்டாரம் தான், சமுதாய குற்றமாக மாறுகிறது. எனவே, நட்பை தேர்ந்தெடுப்பதும், முக்கியம் என்றார்.துவக்க உரை நிகழ்த்திய, மதுரை சமூக அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்கண்ணன் பேசியதாவது: சமூக பொறுப்புணர்வோடு இந்தநிகழ்ச்சியை தினமலர்
நடத்துகிறது. கார்கில் போரில் பலியானவர்களுக்கு, சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சியை இங்கே நடத்தினோம். பாலியல் வன்முறைகள் இனி நடக்க கூடாது என்பதற்கு இந்த நிகழ்ச்சி துவக்கமாக அமைய வேண்டும். பாலியல் வன்முறையை ஆய்வு செய்யும் போது, 94.2 சதவீதம், தெரிந்த நபர்கள்மூலமே நடக்கிறது. கல்வி நிலையமோ, அலுவலகமோ, பாதுகாப்பான நான்கு சுவர்களுக்குள் தான் பாலியல் வன்முறை அதிகம் நடக்கிறது, என்றார். தொடர்ந்து "பெண்ணினம்காப்போம்' என்ற தலைப்பில், உறுதிமொழி வாசித்தார். கமிஷனர் சஞ்சய் மாத்தூர் உத்தரவில், உதவி கமிஷனர் ராஜாமணி, இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மதுரை அனிதா ஸ்டோர்ஸ் சார்பில், அஞ்சலி செலுத்த வந்தோருக்கு பூக்கள் வழங்கப்பட்டன. குடிநீருக்கு, மதுரை மாநகராட்சி ஏற்பாடு செய்திருந்தது.

வாசகர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்பு

பங்கேற்றோர் : முன்னாள் எம்.பி., ராம்பாபு, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலைத் தலைவர் ரத்தினவேலு, லயன்ஸ் மாவட்ட ஆளுனர் முருகேசன், பா.ஜ., நகர் தலைவர் ராஜரத்தினம், பிரசார அணி செயலர் சசிராமன், நகர பொது செயலர் சிவபிரபாகரன், பெட்கிராட் நிறுவனர் சுப்புராம், பாரதியுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு, மதசார்பற்ற ஜனதா தளம் பொது செயலாளர் ஜான்மோசஸ், ம.தி.மு.க., தொழிலாளர்முன்னணி செயலர் மகபூப்ஜான், காங்., செய்தி தொடர்பாளர் விஜயராகவன், காங்., நகர் துணை தலைவர் செய்யதுபாபு, பிராமணர் சங்க அமைப்பு செயலாளர் மோகன், தங்கப்பல் அழகர்சாமி லட்சுமி அம்மாள் நுகர்வோர் மைய தலைவர் அழ.சிதம்பரம், நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை தலைவர் தமிழரசன், செயின்ட் மேரீஸ் பள்ளி உதவி தலைமையாசிரியர் ஜேம்ஸ் லூர்து ராஜ், வீரமாமுனிவர் இலக்கிய பேரவை செயலர் ஜான் பெலிக்ஸ் கென்னடி, தமிழ்நாடு பைப் டிரேடிங் அசோசியேஷன் தலைவர் முகமது நாசர், ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கதலைவர் மைதீன் பாட்சா, செயலாளர் பரமசிவம், அமுத சுரபி கலைமன்றம் தலைவர் பாலகிருஷ்ணன், தியாகி சுப்பிரமணியன், மீனாட்சி மிஷன் மருத்துவமனை மார்க்கெட்டிங் மேலாளர் சிவராமகிருஷ்ணன், துணை மேலாளர் சையது இப்ராகிம், ஐகோர்ட் வக்கீல்கள் காந்தி, கார்த்திகேயன், சுல்தான் பாஷா, சிவசங்கர், முகம்மது ரஷீத், கேசவன், சுவாமி விவேகானந்தர் மன்றம் ரத்த தான இயக்க அமைப்பாளர் திருநாவுக்கரசு, காரல்மார்க்ஸ் நூலக நிறுவனர் எம்.ஜெ.பிரபாகர், ஆலவாய் லயன்ஸ் கிளப் தலைவர் சந்திரகுமார்,
வட்டாரத்தலைவர் முத்தரசு, காந்தி மியூசிய திட்ட அதிகாரி நந்தா ராவ், உடற்கல்வி ஆசிரியர் சங்க செயலாளர் காட்வின், மதுரை நற்பணி மன்றத் தலைவர் எஸ்.எஸ்.ராம கிருஷ்ணன் உட்பட பலர். கல்வி நிறுவனங்கள்
கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி, சுப்பலட்சுமி லட்சுமிபதி கல்லூரி, ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிக்கல் சயின்ஸ், ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ். "மை மதுரை' பள்ளிகள், மதுரை மருத்துவக் கல்லூரி, ஒய்.எம்.சி.ஏ., காதுகேளாதோர் பள்ளி, ஒய்.எம்.சி.ஏ., மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி, தியாகராஜர் பொறியியல் கல்லூரி, டி.வி.எஸ்., கம்யூனிட்டி கல்லூரி, யாதவர் பெண்கள் கல்லூரி, அம்பிகா பெண்கள் கலைக்கல்லூரி, மதுரை சமூக அறிவியல் கல்லூரி.அமைப்புகள் காந்திமியூசியம், பெட்கிராட், போடி சிங்காரவேலன் பழநி பாதயாத்திரை பேரவை, தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம், அவனியாபுரம் ஜெயபாரத் சிட்டி குடியிருப்போர் நலச்சங்கம், மதுரை மிலினியம் லயன்ஸ் சங்கம், மதுரை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம், அங்கயற்கண்ணி மகளிர் குழு, கே.கே.நகர் வசந்தம் ஓட்டல், மதுரை கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாம், அன்னை தெரசா பேரவை, தென் இந்திய நுகர்வோர் பாதுகாப்பு மனிதஉரிமைகள் கவுன்சில், ராஜபாளையம் நுகர்வோர் பாதுகாப்பு மனித உரிமைகள் கவுன்சில், நாடார் மகளிர் மன்றம், தமிழ்நாடு நாடார் பேரவை, மாவட்ட மகளிர் அணி, முனிச்சாலை இன்ட்கோர் ஹெல்த் சென்டர், கூடு பெண்கள் வாசிப்பரங்கம், சிங்காராயர் காலனி இமேஜ் பெண்கள் சங்கம், விஸ்வநாதபுரம் மகளிர் மன்றம், ஒய்.எம்.சி.ஏ., தல்லாகுளம் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை, பிசியோதெரபி நிபுணர்கள் சங்கம், சோழவந்தான் மனித உரிமைக்கழகம், டாடா கன்சல்டன்ட், சவுபாக்கியா மகளிர் தொழில் முனைவோர் கூட்டமைப்பு, ஜெய்ஹிந்த்புரம் சர்வதேச மனித உரிமைக் கழகம், மதுரை முறைசாரா கல்வி மையம்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.